தான் நல்ல விஷயத்தை சொன்னால்கூட அதை சிலர் திரித்துக்கூற முயற்சிப்பதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி நகரில் கடந்த மார்ச் மாதத்தில் பேனர் விவகாரத்தில் நடிகர் சிம்பு ரசிகர் மன்ற தலைவர் மதன் வெட்டி கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து துக்கம் விசாரித்த சிம்பு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.பேனர் விவகாரம் தொடர்பாக தான் வெளியிட்ட இரண்டு வீடியோக்களும் மக்கள் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அப்பொழுது அவர் வேதனை தெரிவித்தார். பேனர் பிரச்சினையால் ஒரு உயிர் போயுள்ளதாக தெரிவித்த அவர், தான் நல்லது சொன்னால்கூட அதை வேறு மாதிரி திரிக்க சிலர் முயற்சிப்பதாகவும் கூறினார்.அண்டாவில் பால் ஊற்ற சொன்னது ஏழை மக்களுக்குத்தானே தவிர கட்அவுட்டுக்கு அல்ல என்று கூறிய அவர், தான் கூறியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக மீண்டும் வேதனை தெரிவித்தார்.