man vs wild நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த்

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் man vs wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் man vs wild . பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் அடர்ந்த காட்டுக்குள் சென்று அங்குள்ள சவால்களை எதிர்கொள்வார்.

 இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஓபாமா, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் man vs wild நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டார் என்றும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியை தொடர்ந்து இந்தியா சார்பில் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version