ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன்

ஹாலிவுட்டில் திரைப்படத்தில் நடிக்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

புதுமையான கதைக்களங்களை கையாள்வதில் பார்த்திபன் எப்போதும் கில்லாடி என்பது கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடைசியாக அவர் நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றது. இந்திய சினிமா சார்பில் ஆஸ்காருக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

தற்போது ஒத்த செருப்பு திரைப்படம் இந்தியில் நவாசுதீன் சித்திக் நடிக்க பார்த்திபனே ரீமேக் செய்கிறார்.

இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குநர் தன்னைப் பாராட்டி, அவர் இயக்கும் படத்தில் நடிக்க அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் பார்த்திபன் நேரடியாக ஹாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்

Exit mobile version