கடந்த 2008ஆம் ஆண்டு, மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் – பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக, 6 கோடியே 90 லட்சம் ரூபாயும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மர்மயோகி படத்தை தயாரிக்காமல், உன்னைபோல் ஒருவன் படத்திற்கு, அந்த பணத்தை கமல்ஹாசன் செலவு செய்ததாக புகார் எழுந்தது. எனவே, முன் பணமாக கொடுத்த 6 கோடியே 90 லட்சம் ரூபாயை கேட்டு சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த 4 கோடி ரூபாயை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 44 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகே, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட வேண்டும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கை தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நடிகர் கமலஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: சென்னை உயர் நீதிமன்றம்நடிகர் கமல்ஹாசன்நோட்டீஸ்
Related Content
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை - உயர்நீதிமன்றம்
By
Web Team
September 18, 2020
இந்தியன்-2 விபத்து: மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு கமல் ஆஜராகி விளக்கம்
By
Web Team
March 3, 2020
இந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்
By
Web Team
February 21, 2020
மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்: நடிகர் கமல் ட்வீட்
By
Web Team
February 20, 2020
அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது?
By
Web Team
February 8, 2020