இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்? – ஆர்வம் காட்டும் இயக்குநர்!

நடிகர் ஜெய் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  

சிம்பு நடிக்கும் படத்தில் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், ஜெய்யை அறிமுகப்படுத்த சுசீந்திரன் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இசையமைப்பாளர் தேவாவின் உறவினரான ஜெய், லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் பியானோ பயிற்சி முடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய படங்களில் கம்போசிங் வேலைகளிலும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயது முதலே இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான் தமது லட்­சி­ய­மாக இருந்­தது. நடி­க­ரா­னது தற்­செ­ய­லாக நிகழ்ந்தது என்று ஒருமுறை நடிகர் ஜெய் தெரிவித்திருந்தார். அவரது லட்சியத்துக்கு சரியான காலம் கைகூடிவந்துள்ளது. 

Exit mobile version