தனுஷின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தானா?

மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மித்ரன் ஜவஹர் – தனுஷ் கூட்டணியில் உருவான, ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிப்பதாகவும், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version