காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக நடிகர் சிரஞ்சீவி முடிவு

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்க்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியில் இருந்து விலக நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடியை எதிர்கொள்ள மாநில கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார்.

இதை சந்திரபாபு நாயுடுவும், ராகுல் காந்தியும் கடந்த ஒன்றாம் தேதி கூட்டாக அறிவித்தனர். தெலுங்கு தேசத்துடன் கைகோர்க்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து ராகுல் காந்தியை சந்தித்து தனது அதிருப்தியை பதிவு செய்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனது முடிவை ஓரிரு நாளில் சிரஞ்சீவி அறிவிப்பார் எனத் தெரிகிறது.

Exit mobile version