நடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி என காவல் ஆணையரிடம் புகார்

நடிகர் அதர்வா 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி தயாரிப்பாளர் ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளிவந்த செம போத ஆகாதே என்கிற திரைப்படம் அதர்வாவின் சொந்த தயாரிப்பில் வெளியாகியது… இந்த படத்தின் விநியோகஸ்தர் உரிமையை மதியழகன் என்பவர் ரூபாய் 5.5 கோடிக்கு அதர்வாவிடம் இருந்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் படம் வெளியாக தாமதம் ஆனதால் 5.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக அதார்வாவிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்காததால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அதர்வாவை வரவழைத்து தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது நஷ்டத்திற்கு ஈடாக பணம் இல்லாமல் படம் நடித்து தருவதாக அதர்வா , ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பின்னர் மதியழகன் அதர்வாவை வைத்து, மின்னல் வீரன் என்ற படத்திற்கு பூஜை போட்டார். .

அதற்காக 50லட்சம் ரூபாய் வரை செலவழித்ததாக மதியழகன் கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தையும் அதர்வா முடித்து தராமல் ஏமாற்றியதாக மதியழகன் தற்போது புகார் கூறியுள்ளார்.

இதனால் 6கோடி ரூபாய் வரை அதர்வாவால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதர்வா நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும் மதியழகன் புலம்பி வந்தார். பின்னர், இது தொடர்பான நஷ்ட தொகையை 3மாதத்தில் திருப்பி தருவதாக அதர்வா கூறியதாகவும், ஆனால் 1 வருடம் ஆகியும் பணம் தராததால் மதியழகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பணத்தை ஏமாற்றிய அதர்வா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்..

Exit mobile version