மீ டூ குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஸ்மயா என்னும் கன்னட திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மீ டூ குற்றச்சாட்டு தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஸ்ருதி ஹரிஹரனுடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்ததால் ரிகர்சல் கூட வேண்டாம் என தான் கூறியதை நடிகர் அர்ஜுன் நினைவுக்கூர்ந்துள்ளார்.

மொத்தமே அவருடன் 5 நாட்கள் தான் நடித்ததாக சுட்டிக் காட்டிய அர்ஜுன், எந்த பெண்ணிடமும் தவறாக நடந்துக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version