படத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றிய நடிகர் அஜீத்

விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜீத் திரைப்பட விதிகளை பின்பற்றியது போல், அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள அஜீத், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்தும், கார் ஓட்டும் பொழுது சீட் பெல்ட் அணிந்தும் செல்வதை குறிப்பிட்டுள்ளார்.

லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அஜீத் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் அர்ஜூன் சரவணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version