இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமாரின் புதிய ஸ்டைலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கி வரும், வலிமை படத்தில்,  நடிகர் அஜித்குமார் பிஸியாக உள்ளார். சமீபத்தில், படப்பிடிப்பின் போது, காயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது ரசிகர்கள், பிரார்த்தனை, டிக்டாக்கில் வீடியோ, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் என பரபரப்புக்கு உள்ளாகினர்.

 அதே நேரம், தீபாவளிக்கு வெளியாகும் வலிமை திரைப்படத்திற்கு அப்டேட் கேட்டு, அஜித்குமார் ரசிகர்கள், காத்திருக்கும் வேளையில், இன்று புதிய ஸ்டில்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Exit mobile version