சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மதுரை கிழக்கு பகுதியில் 529 கோடி ரூபாய் மதிப்பில் 449 கிலோ மீட்டருக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version