இருசக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரங்கள் : நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் உறுதி

சென்னை வேளச்சேரியில் விவிபேட் இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையானது.

இதில், தேர்தல் பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது தேர்தல் விதிமீறல் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட விவிபேட் இயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாக அவர் கூறினார். வேளச்சேரி சம்பவம் குறித்த புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்தும், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Exit mobile version