அரசுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

காஞ்சிபுரம் அருகே அரசுக்கு சொந்தமான 600 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அபகரித்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

சத்திய நாராயணன் என்பவர், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறி ராஜ் என்பவர், பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், அரசு நிலத்தை அபகரித்ததற்கான சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

Exit mobile version