2020-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் கருவி பொருத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் படி, மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான குழுவினர் மாவட்டம் தோறும் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.