பள்ளி அருகே போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை

பள்ளிகளின் அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் பற்றிய தகவலை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்

இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட், சிப்ஸ் வகைகளுடன் சிகரெட்டுகளை விற்பனை செய்யும் கும்பல்கள் பள்ளிகளின் அருகே தென்பட்டால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.பள்ளி மாணவர்களை புகையிலை விற்கும் கும்பலின் பிடியில் இருந்து காக்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version