தமிழகத்தில் சுகாதார திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் சுகாதார திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து உலக வங்கியுடன் ஆயிரத்து 987 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.

சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், பல திட்டங்களை செயல்படுத்தவும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில், ஆம்புலன்ஸ் வசதியை நவீனப்படுத்தவும், குழந்தை இறப்பை தவிர்க்கும் விதமாகவும், தீர்க்க முடியாத நோய்களை தடுக்கவும், மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து ஆயிரத்து 987 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 69 சதவீத இறப்பு விகிதத்தை தடுக்க முடியும் என்றும், அதேபோல 108 ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சை கருவிகள் 24 மணி நேரம் தயார் நிலையில் இருக்கும் வகையிலும் நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுள்ளது.

Exit mobile version