மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடத்தை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி திறக்க ஏதுவாக சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் 57 கோடியே 96 லட்ச ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை போன்ற கட்டிட வடிவமைப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், இதுவரை 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி நினைவிடத்தை திறக்க ஏதுவாக பணிகளை துரிதப்படுத்த சிறப்பு கண்காணிப்பு அதிகாரியை பொதுப்பணித்துறை நியமித்துள்ளது. பொதுப்பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற பாண்டியராஜனை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.