ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தைக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் சிறப்பு தூதர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 17 வருடங்களாக தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் அரசு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தலிபான்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வகையில் ஆப்கன் அதிபருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.