பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்சிலிப்பில் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, காட்டுயானைகள், புள்ளிமான் என பல்வேறுவிலங்குகள் வசித்து வருகின்றனா, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் டாப்சிலிப் செல்லும் சாலை கடக்கும் காட்டு யானைகளை படம் பிடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், இதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் குழுக்களாக ரோந்து பணியில் ஈடுப்பட்டும், வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் காட்டு பகுதிகளில் உள்ள யானைகளை அதன் சுற்றுலா பயணிகள் துன்புறுத்தினாலோ அல்லது இடையூறாக செயல்பட்டாலோ கடும் நடவடிக்க எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.