மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணி சரியாக மேற்கொள்ளாமல் இருந்த தனியார் நிறுவன மேலாளர் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கோவை அரசு மருத்துவமனையில் 67 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில் 2 பேருக்கு டெங்கு அறிகுறியுடனும், 17 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறியுடனும் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவர்,காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.