அறநிலையத்துறை ஊழியர்களுக்கு, 7வது ஊதிய குழு பரிந்துரையை நிறைவேற்ற நடவடிக்கை தீவிரம்

இந்துசமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்தரரெட்டி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனிமலைக் கோவிலில் இரண்டாவது ரோப்கார் அமைப்பது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்தரரெட்டி அதிகாரிகளுடன் மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறநிலையத்துறை மற்றும் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கூடாது என்று எண்ணம் கிடையாது என்றும், காலிப்பணியிடங்கள் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவிக்கும் போது அந்த பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version