FB Messenger-ல் அதிரடி மாற்றம்: பயனாளர்கள் அதிருப்தி

பேஸ்புக்கின் Messenger சேவையை பயன்படுத்த இனி பேஸ்புக் அக்கவுண்ட் கட்டாயம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மற்றவர்களுடன் உரையாட Messenger சேவை பயன்பட்டு வருகிறது. இதனை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள்  நேரடியாக பேஸ்புக்கில் செல்லாமலும், பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்கள் நேரடியாகவும் பயன்படுத்தலாம். இந்த முறையில்  தற்போது அந்நிறுவனம் மாற்றம் செய்திருக்கிறது. இதனால் இனி Messenger சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் பயனாளர்கள் பேஸ்புக்கினுள் sign in செய்வது அவசியமாகிறது.

இந்த புதிய முறை பேஸ்புக் Messenger மற்றும் Messenger Lite ஆகிய இரு செயலிகளுக்கும் பொருந்தும். மேலும் இந்த புதிய விதிமுறை பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கட்டாயமாகிறது. அக்கவுண்ட் இல்லாமல் நேரடியாக உபயோகித்தவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை பேஸ்புக்கின் பிற Messenger, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு திட்டமே என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Exit mobile version