கன்னியாகுமரி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 71ஆயிரத்து 275 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏராளமான பணப்புழக்கம் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது லஞ்சமாக பெற்ற 71ஆயிரத்து 275 ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார் பதிவாளர் ஈஸ்வரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் கொடுக்க முயன்ற பத்திர எழுத்தர்கள் 4 பேரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.