கொரோனா வைரஸை ஆபத்தான தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஆபத்தான தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 118க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மற்றவர்களுக்கு எளிதில் பரவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 ஆயிரத்து 616 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ், கொரோனா வைரசை ஆபத்தான தொற்று நோய் என வகைப்படுத்துவதாகவும், இதுபோன்ற நோய் தொற்றை இதற்கு முன் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version