ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என நாளை மறுதினம் வாக்காளர்களுக்கு செயல்முறைப்படுத்த இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாஷூ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ஒப்புகை சீட்டு இயந்திரங்களை எவ்வாறு பயப்படுத்த வேண்டும் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாளை மறுதினம் முதல் இம்மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் 67,000 வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாக வாகனங்கள் மூலமாக இயந்திரங்களை கொண்டு சென்று வாக்காளர்களிடம் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என விளக்கவும் ஒவ்வொரு
வாக்குசாவடியிலும் 100 பேர் வரை வாக்கு பதிவு இயந்த்திரத்தை இயக்கி பார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாஷூ தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 4 வண்டிகள் மூலம் வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு சென்று விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, அறிவுறுத்தியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.