முதலமைச்சரிடம் இருந்து சாதனை விருது பெற்ற மாணவி பவதாரணிக்கு பாராட்டு!

முதலமைச்சரிடம் இருந்து சாதனை விருது பெற்ற மாணவி பவதாரணிக்கு, கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நெல்லிக்கொல்லையில், கிராம ஊராட்சி மன்றத்தின் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கான ஊட்டச்சத்து, சரிவிகித உணவின் அவசியம் ஆகியவை குறித்து துண்டுபிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து, தமிழகத்தின் சிறந்த சமூக முன்னேற்ற பெண் குழந்தை என்ற விருதை பெற்ற பவதாரணி பங்கேற்றார். அவருக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version