குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்..
குஜராத் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் கோலியின் பதவிக்காலம் ஜூலை 16ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, குஜராத் மாநிலத்தின் புதிய ஆளுநராக, இமாச்சலபிரதேசத்தின் ஆளுநராக இருந்த ஆச்சாரிய தேவ் விராட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆச்சாரிய தேவ் விராட்டின் இடத்தை நிரப்ப, முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா, இமாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 155 மற்றும் 156 வழங்கும் அதிகாரத்தின்படி, இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.