உள்நாட்டு செயலி சிங்காரிக்கு குவியும் வெளிநாட்டு முதலீடுகள்!!

சிங்காரி செயலிக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ள நிலையில், வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் டிண்டர் நிறுவன தலைமை தயாரிப்பு அதிகாரி பிரையன் நோகார்டு மற்றும் ஓ.எல்.எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரிஸ் கிரிண்டா ஆகியோர், சிங்காரி செயலியில் முதலீடு செய்துள்ளனர். உலகளவில் புகழ் பெற்ற தொழில் முனைவோர்கள், சிங்காரி நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டு, முதலீடுகளை மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக, சிங்காரி நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி சுமித் கோஷ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version