நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்த தையல் தொழிலாளியின் மகளுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் அரசுப்பள்ளியில் படித்து வந்த ஜீவிதா, நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரின் தந்தை பன்னீர்செல்வம் ஒரு தையல் தொழிலாளி. நாள் முழுவதும் தையல் இயந்திரத்தை ஓட்டினால் தான், அன்றாட வாழ்க்கை நடத்த முடியும் என்றநிலை உள்ளதாக கூறுகின்றனர். பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகள் ஜீவிதா, பத்தாம் வகுப்பில் தேர்வில் 497 மதிப்பெண்களும் 12ம் வகுப்பில் ஆயிரத்து 161 மதிப்பெண்களும் எடுத்து சாதித்து உள்ளார். ஜீவிதா, இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதி, 605 மதிப்பெண்கள் எடுத்து அசத்தி உள்ளார்.

Exit mobile version