கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்து

கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துகளில் வேன் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஈரோட்டிலிருந்து – சங்கரன் கோவிலுக்கு துணி லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாக பெங்களூரிலிருந்து – திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த கொரியர் வேன், மற்றும் கண்டெய்னர் லாரி ஆகியவை மோதி விபத்தில் சிக்கின. இதில், கொரியர் வேனை ஓட்டிச் சென்ற சின்னச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தொடர் விபத்தால் கரூர் – வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version