சென்னை பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் வயர் அறுந்து விழுந்த சம்பவத்தில், குறிப்பிட்ட 10 ராட்சத ராட்டினத்தை இயக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூவிருந்தவல்லியில் அடுத்த பழஞ்சூர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் ப்ரீ பால் டவர் எனும் ராட்டினத்தின் ஒரு பகுதியில் இருந்த இரும்பு வயர்கள் அறுந்து கீழே விழுந்தது. இந்த காட்சிகள் அங்கு சுற்றுலா சென்ற ஒருவர் படம்பிடித்துள்ளார். ராட்டினம் உயரத்தில் இருந்து கீழே இறங்கிய பிறகு, அதன் கம்பிகள் அறுந்து விழுந்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள குறிப்பிட்ட 10 ராட்சத ராட்டினங்கள் இயக்க தற்காலிகமாக தடைவிதித்துள்ளார். ராட்டினத்தின் என்ஜின் மற்றும் அதன் தன்மைகள் குறித்து பொறியாளர் நிபுணர்கள் அறிக்கை அளித்தவுடன், பொதுமக்கள்ன் பாதுகாப்புக்கு உறுதி செய்த பின் ராட்டினத்தை இயக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post