தமிழகத்தில் மேலும் 5 இடங்களில் அவசர விபத்து சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உடனடி விபத்து அவசர சிகிச்சை மையத்தைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்கெனவே 5 இடங்களில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆறாவது இடமாகத் திருப்பெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் விபத்தில் காயமடைந்தவர்கள் உயிர் இழக்கும் அபாயம் பெருமளவில் குறையும் எனவும், தமிழகத்தில் மேலும் 5 இடங்களில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.