உலக நாடுகள் அனைத்தும் வெவ்வேறு காரணங்களால் வெவ்வேறு மாதங்களில் மருத்துவர்கள் தினம் கொண்டப்படுகிறது. 1991ம் ஆண்டு முதல் ஜுலை 1ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் கொண்டப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்கம் மாநிலத்தின் இரண்டவது முதலமைச்சர் டாக்டர். பிதான் சந்திர ராய் பெருமைக்குறிய மருத்துவ மாமேதை இவர். 1 ஜூலை 1882ம் ஆண்டு பிறந்து சரியாக 80 ஆண்டு கழித்து அதே தேதியில் மறைந்தார்(1962). இவரது பிறந்த மற்றும் மறைந்த நாளை போற்றும் விதமாக மருத்துவர்கள் தினம் கொண்டப்படுகிறது.
மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இந்தியாவில் மிக உயர்வான பாரத ரத்னா விருதை பிப்ரவரி 4, 1961 கொடுத்து அரசு கௌரவித்தது.
மக்களுக்கு எப்பொழுதும் மருத்துவர்கள் மேல் ஒரு தனிப்பட்ட அன்பும், மரியாதையும் உண்டு. அவர்கள் நம் உயிரை காப்பாற்றுவார்கள்,நம் உடல் நிலை மீது அக்கறை செவுத்துவர்கள். மருத்துவ துறையில் நாம் மிகப்பெரிய சாதனைகளை பெற்றுள்ளோம். ஒவ்வொரு மருத்துவரும் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களுக்கு சேவை செய்கின்றனர். இந்த சேவையை போற்றும் விதமாக இந்த வருடம் மருத்துவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று தான்.
இந்த வருடம் துவக்கம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் உள்ளது. அதில் இருந்து காக்க மருத்துவர்கள் பெரிதும் உழைத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் மிக சிரமத்துடன் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையிலேயே இல்லை அருகிலே தங்கி கொரோனா நோயாளிகளுக்கு பயம் இல்லாமல் அவர்களின் பணியை மேற்கொள்கின்றனர். இன்று அவர்களை போற்றும் விதமாக மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று நாம் அனைவரும் கடைப்பிடித்து நடப்போம். மருத்துவர்களை நினைவுகூருவோம், மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று அவர்களை போற்றும் விதமாக நடந்து கொள்வோம்.