கேரள தங்கக்கடத்தல் வழக்கில் அப்து என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் இயங்கி வரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்தநிலையில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஸ்வப்னா சுரேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். இதனிடையே, கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பைசல் ஃபரீத்திற்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்க இண்டர்போல் அமைப்பிடம் தேசிய புலனாய்வு முகமை கேட்டுக் கொண்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில், மலப்புரம் மாவட்டம் கோழிசேனா பகுதியைச் சேர்ந்த அப்து என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஸ்வப்னா உடனான தொடர்புகள் குறித்து அப்துவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.