சென்னையில் பொங்கல் முதல் புதிய குளிர்சாதனப் மாநகரப் பேருந்து இயக்கம்

பொங்கல் பண்டிகை முதல் இயக்கப்படும் குளிர்சாதன வசதிக் கொண்ட மாநகரப் பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்தின் வசதிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குளிர்சாதன வசதி கொண்ட இந்த மாநகரப் பேருந்து சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version