வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 14 இளைஞர்களிடம் ரூ.2கோடியே50லட்சம் ரூபாய் மோசடி செய்த மோகன்ராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி மடுவின்கரையை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் தினேஷ் இவர் வெளிநாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய வேண்டி அவரது நண்பரிடம் கேட்டுள்ளார். அவர் வளசரவாக்கத்தை சேர்ந்த கன்சல்டன்சி நிறுவனம் பற்றி கூறி தினேசின் விவரங்களை வாங்கி கன்சல்டன்சியிடம் கொடுத்துள்ளார். அதன் பேரில் எஜிகேசன்
அண்ட் ஜாப் கன்சல்டன்சி நிறுவனத்தில் இருந்து மீரா என்பவர் தினேஷை தொடர்பு கொண்டு நேர்காண்லுக்கு அழைத்துள்ளனர். நேர்காணலுக்கு சென்ற தினேஷிடம் நேர்காணல் முடிந்து பணிக்காக 5 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். அதனை தினேஷ் கொட்டிவாக்கத்தில் வைத்து மோகன்ராஜிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் பல மாதங்களாகியும் வேலையும் வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது இதனால் தாம் ஏமாற்றப்படுவதை அறிந்த தினேஷ் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
பின்னர் விசாரித்து பார்த்ததில் இவர்கள் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மோஹன்ராஜை போல் இந்த மோசடி கும்பலிடம் 14 இளைஞர்கள் சுமார் 2.5 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர். இளைஞர்கள் அனைவரும் வளசரவாக்கம் சென்று பார்த்த போது மோகன்ராஜ், மீரா ஆகியோர் கன்சல்டன்சி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
அப்பாவி இளைஞர்களை இனியும் ஏமாற்றாமல் இருக்க மோகன்ராஜ், பீரித்தி மீரா, நிவேதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணம் கொடுத்து ஏமார்ந்து 14 பெரும் பணம் வழங்கிய ஆதாரத்துடன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் மோகன்ராஜ் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.