2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சியட் டயர் தொழிற்சாலை துவக்க விழாவில் உரையாற்றிய, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால், 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன்மூலம், 10 மாதங்களில், சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன், 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.