கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் இ-பாஸ்- சென்னை மாநகராட்சி!

இ-பாஸ் நடைமுறை எளிமையான பிறகு கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இ-பாஸ் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இ-பாஸ் முறைக்கான தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கடந்த 17ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற எளிமைப்படுத்தப்பட்டது. ஆதார் அல்லது குடும்ப அட்டையுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இ- பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேரின் இ- பாஸ் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 41 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று, அதில் சுமார் 96 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version