பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தெரிவித்தாக, ஏ.என்.ஐ செய்திநிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அண்மையில் நிலவிய பதற்றத்தின் போது, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. பின் பல்வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார். இதனையடுத்து வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைத்தனர். இந்நிலையில் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநந்தனிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானியர்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம், அபிநந்தன் உடலளவில் துன்புறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.