இணையதளத்தில் அமோக வெற்றி பெற்ற பிரீத் 2 சீஸனில் அதிரடியாக அபிஷேக் பச்சன் என்ட்ரி கொடுக்கிறார்ǃǃǃ

மாதவன் நடிப்பில் மயங்கா சர்மா இயக்கத்தில் அமேசான் OTT Platformல் 26 ஜனவரி 2018ஆம் ஆண்டு ”பிரீத்” (BREATHE) வெப் சீரிஸ் ரிலீஸ் செய்யப்பட்டது. பல வருடம் நடிக்காமல் இருந்த மாதவன் பின் சுதா கொங்கரா இயக்கத்தில் ”இறுதிச்சுற்று” படத்தில் நடித்தார். “இறுதிச்சுற்று”படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது., மாதவன், ரித்விக்கா நடிப்பு மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டது. அதில் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிக்கரமாக அமைத்தார் மாதவன். அதை தொடர்ந்து புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் இரண்டு வருடம் கழித்து விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்த ”விக்ரம்வேதா” படம் மக்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று அமோக வசூல் சாதனை படைத்தது. அவரது ரசிகர்கள் அடுத்து என்ன படம் வெளியாகும் என்ற எதிர்பாத்த நிலையில் அமேசான் OTT Platformல் வெளிவந்தது பிரீத்,சீசன்1. 2018ஆம் வருடம் தனது பயணத்தை வெப் சீரிஸ் பக்கம் திருப்பினார் மாதவன், உளவியல் த்ரில்லரான இந்த சிசனில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஹிந்தி மற்றும் தமிழில் எட்டு எபிசோடுகளாக வந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சக்க போடுபோட்டது. ”மாதவன் அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார்… பிரீத் படத்தில் மாதவன் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து, தன் மகனுக்காக உயிரை கொடுத்து காப்பாற்றும் கதாபத்திரத்தில் மாதவன் வாழ்ந்து இருப்பார்.

இந்தநிலையில் பிரீத் 2 சீசன் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்பாத்து காத்துகொண்டுருந்த நிலையில், அபிஷேக் பச்சன் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் BREATHE: INTO THE SHADOW சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார். பிரீத் 2 சிசனில் அபிஷேக் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், முதல் பாகத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த அமித் சாத் இதில் மீண்டும் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். நித்திய மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய மயங்கா சர்மா இந்த சிரிஸை இயக்குகிறார். BREATHE : INTO THE SHADOW வெப் சிரிஸ் அமேசான் ப்ரைம்மில் ஜூலை 10ம் தேதி வெளியாகிறது. பிரித் முதல் சிசன் போலவே இரண்டாம் சீசன் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

Exit mobile version