விமானி அபிநந்தனை பத்திரமாக உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ளதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது. தங்களிடம் அபிநந்தன் பாதுகாப்பாக உள்ள வீடியோவை பாகிஸ்தான் தரப்பும் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதர் சையது ஹைதர் ஷாவை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனுக்கு எந்தவொரு பாதிப்பும் நேரக் கூடாது எனவும், அவர் உடனடியாக, பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களும் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைக்கப்பட்டன.