பாகிஸ்தானால் சிறைப் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தார். வாகா எல்லையில் அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆயிரக்கணக்கானோர் அளித்தனர். கடந்த 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமான படையை இந்திய விமான படையினர் விரட்டியடித்தனர். இந்த நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். அவரை பத்திரமாக மீட்க மத்திய அரசு உடனடி முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து இருநாட்டு எல்லையான வாகாவில், இந்திய வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.