இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் உடலில் எந்தவித மின்னனு பொருட்களும் பொருத்தப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதும் அவர் டெல்லி கன்டோன்மெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையில், முதுகு தண்டுவடத்தின் கீழ் பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது.
விமானத்தில் இருந்து கீழே குதித்ததால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் அவரது உடலில் சிப் எனப்படும் மின்னணு பொருட்கள் பொருத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.