மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதற்காக, அப்துல் கலாமின் அண்ணன் பேரன்கள் இணைந்து, ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையை துவக்கியுள்ளனர்.
ஏபிஜே சலீம் மற்றும் ஏபிஜே தாவூத் இருவரும் இணைந்து தொடங்கியுள்ள ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் மூலம், முதல் கட்டமாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சமுதாய காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக சென்னை விமான நிலையமும், தென்மண்டல விமான நிலையமும் இணைந்து மரக்கன்றுகளை நடுவதற்காக,19 லட்சம் மதிப்புள்ள நவீன வாகனங்களை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் விமான நிலையங்களை சுற்றி ஒரு லட்சம் மரங்களை வளர்க்கும் திட்டத்தின் படி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை விமான நிலையங்களில் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஏபிஜே ஷேக் தாவூத், 2020ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.