ஒரு ரூபாய் நாணயங்களைக் கொண்டு உருவான அப்துல்கலாம்

சென்னை ஆவடி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிரம்மாண்ட உருவத்தை ஒரு ரூபாய் நாணயங்களைக் கொண்டு உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக 25 அடி அகலமும் 21.5 அடி நீளமும் கொண்ட வெள்ளைநிற துணியில், சுமார் 19 ஆயிரத்து 500 ஒரு ரூபாய் நாணயங்களைக் கொண்டு அப்துல்கலாம் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவரது சாதனையை “கலாம் சாதனை புத்தகம்” என்கிற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து விருதும் பதக்கமும் வழங்கி பாராட்டினர். இந்த சாதனையை மேற்கொள்வதற்கு பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய மாணவர், அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Exit mobile version