சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங்கை நியமனம் செய்து அரசு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங்கை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொறுப்பு வகித்து வந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதை தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்துள்ளது. கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அபய்குமார் சிங் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version