50% சொந்த லாரிகளை இயக்க ஆவின் பால் நிறுவனம் திட்டம்

ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற சிக்கல்கள் இருப்பதனால், 50 சதவீத அளவிற்கு சொந்த லாரிகளை இயக்க ஆவின் பால் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. லாரி வேலை நிறுத்தத்தின் போது, உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தனியார் லாரிகள் மூலம் எந்தவித பாதிப்பும் இன்றி ஆவின் பால்கள் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது. ஏற்கனவே, ஆவின் பால் நிறுவனத்திற்கு சொந்தமாக 56 டேங்கர் லாரிகள் உள்ள சூழ்நிலையில், மேலும் அதன் எண்ணிக்கையை உயர்த்த நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

Exit mobile version