3வது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி கட்சி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்க முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

Exit mobile version