புனிதமற்ற கூட்டணி என்ற சொல்லாடலை சமீபத்தில் பயன்படுத்தியவர் டெல்லியின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்.மாற்று அரசியல் என கூறிக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு சற்று குழப்பமானது.
வெளியில் எதிரியாகவும் உள்ளுக்குள் ரகசிய கூட்டணியும் வைத்துக்கொள்ளும் கட்சிகளை தான் இவ்வாறு குறிப்பிடுவதாக விளக்கம் அளித்தார். ஊழல்வாதிகளுக்கு எதிரானவராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்த மகான்… டெல்லியில் கூட்டணி கதவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தின் அழுத்ததால் இழுத்து மூடியது காங்கிரஸ்… இதன் விரக்தியில் கெஜ்ரிவால் இப்படி பேசுகிறார் என்ற தகவல் டெல்லி அரசியல் வட்டாரத்தில் கொளுந்துவிட்டு எரிந்தது… அதன் அனல் அடங்குவதற்குள் தமிழகத்தில் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்து அக்கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி… ஆம், ஊழலில் ஊரி போன திமுக-காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் விதமான நிலைபாடு தான் அது… அடிப்படையில் திமுகவை ஊழல் கட்சி என விமர்சித்துவிட்டு தற்போது அவர்களுக்கான மாற்று சக்தியை எதிர்த்து குழப்பத்தை ஏற்படுத்திபடுத்தியுள்ளது… இதனால் தமிழக ஆம் ஆத்மியினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளனர்…